கட்டணம் செலுத்தி, விண்வெளிக்கு முதல் பயணம் - விர்ஜின் காலக்டிக் சாதனை

July 3, 2023

விண்வெளிக்கு கட்டணம் வாங்கி பயணிகளை அனுப்பும் வர்த்தகத் திட்டத்தில் விர்ஜின் காலக்டிக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன்படி, நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக, கடந்த வியாழக்கிழமை, தனது முதல் வர்த்தக விண்வெளி பயணத்தை விர்ஜின் காலக்டிக் தொடங்கியுள்ளது. இதன் மூலம், விண்வெளி துறையில், வர்த்தக முறையை கொண்டு வந்த முதல் தனியார் விண்வெளி நிறுவனமாக விர்ஜின் காலக்டிக் சாதனை படைத்துள்ளது. விர்ஜின் காலக்டிக் நிறுவனத்தின் முதல் வர்த்தக விண்வெளி பயணத்தில், 6 பேர் விண்ணுக்கு […]

விண்வெளிக்கு கட்டணம் வாங்கி பயணிகளை அனுப்பும் வர்த்தகத் திட்டத்தில் விர்ஜின் காலக்டிக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன்படி, நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக, கடந்த வியாழக்கிழமை, தனது முதல் வர்த்தக விண்வெளி பயணத்தை விர்ஜின் காலக்டிக் தொடங்கியுள்ளது. இதன் மூலம், விண்வெளி துறையில், வர்த்தக முறையை கொண்டு வந்த முதல் தனியார் விண்வெளி நிறுவனமாக விர்ஜின் காலக்டிக் சாதனை படைத்துள்ளது.

விர்ஜின் காலக்டிக் நிறுவனத்தின் முதல் வர்த்தக விண்வெளி பயணத்தில், 6 பேர் விண்ணுக்கு சென்றுள்ளனர். அவர்களில், இத்தாலி வான் படையை சேர்ந்த கர்னல் வால்டர் வில்லடே, லெப்டினென்ட் கர்னல் ஏஞ்சலோ லேண்டுல்பி மற்றும் இத்தாலி ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த முக்கிய ஆராய்ச்சியாளர் பென்டிலியோன் கார்லூசி ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விர்ஜின் காலக்டிக் நிறுவனத்தை சேர்ந்த காலின் பெனட் மற்றும் இரு விமானிகள் இந்த விண்வெளி பயணத்தில் இணைந்திருந்தனர். இத்தாலி படை வீரர்கள் இடம் பெற்றிருந்ததால், விண்வெளி பயணத்தின் முதல் சில வினாடிகளில், இத்தாலிய தேசிய கொடி பறக்க விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக, வரும் ஆகஸ்ட் மாதத்தில், இரண்டாம் வர்த்தக விண்வெளி பயணத்தை விர்ஜின் காலக்டிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu