விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் முதல் பிரிட்டன் விண்வெளி திட்டத்தில் தாமதம்

December 9, 2022

விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் முதல் பிரிட்டன் விண்வெளி திட்டம் டிசம்பர் 14ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. அதனை, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் ஒழுங்கு முறை சார்ந்த சவால்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக விர்ஜின் ஆர்பிட் தெரிவித்துள்ளது. விண்வெளி பயணத்திற்கான உரிமங்களை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் முதல் பிரிட்டன் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனம், பிரத்யேக ராட்சச ஜெட் […]

விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் முதல் பிரிட்டன் விண்வெளி திட்டம் டிசம்பர் 14ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. அதனை, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் ஒழுங்கு முறை சார்ந்த சவால்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக விர்ஜின் ஆர்பிட் தெரிவித்துள்ளது. விண்வெளி பயணத்திற்கான உரிமங்களை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் முதல் பிரிட்டன் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விர்ஜின் ஆர்பிட் நிறுவனம், பிரத்யேக ராட்சச ஜெட் விமானம் மூலம் விண்வெளி ஏவுதல் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. சுமார் 35000 அடிகள் உயரத்திற்கு சென்ற பின்னர், திரவ வடிவிலான எரிபொருள் கொண்ட கலத்தை அது வெளியேற்றுகிறது. அதன் பின்னர், 4 வினாடிகள் கழித்து, இது சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்துவதற்கான செயல்பாடுகளை தொடங்குகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu