நியூயார்க்கில் பறந்த மர்ம விமானம் விர்ஜினியாவில் விழுந்து நொறுங்கியது

June 5, 2023

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில், மர்மமான முறையில் விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. ஞாயிறு மதியம் பறந்து சென்ற விமானத்தை தொடர்பு கொண்ட பொழுது, அந்த வர்த்தக விமானத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, அமெரிக்க ராணுவத்தினர் போர் விமானம் ஒன்றை மர்ம விமானத்தை நோக்கி செலுத்தினர். மர்ம வர்த்தக விமானத்தை பின்தொடர்ந்து போர் விமானம் சென்றது. இந்நிலையில், விர்ஜினியா கிராம பகுதியில் மர்ம விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமானம் மிகப்பெரிய […]

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில், மர்மமான முறையில் விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. ஞாயிறு மதியம் பறந்து சென்ற விமானத்தை தொடர்பு கொண்ட பொழுது, அந்த வர்த்தக விமானத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, அமெரிக்க ராணுவத்தினர் போர் விமானம் ஒன்றை மர்ம விமானத்தை நோக்கி செலுத்தினர். மர்ம வர்த்தக விமானத்தை பின்தொடர்ந்து போர் விமானம் சென்றது. இந்நிலையில், விர்ஜினியா கிராம பகுதியில் மர்ம விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானம் மிகப்பெரிய ஒலியுடன் வர்த்தக விமானத்தை துரத்திச் சென்றது, நியூயார்க் மக்களை பதற்றம் அடைய செய்தது. இறுதியில், விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிந்த பின்னர், அந்தப் பகுதியை ஆய்வு செய்ததில், விமானத்திலிருந்து யாரும் பிழைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் ஆபத்து நேர வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவாக விசாரித்ததில், லாங் ஐலேண்ட் மேக் ஆர்தர் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டிய அந்த விமானம், எதிர்பாராத விதமாக நியூயார்க் லாங் ஐலேண்ட் நோக்கி திசை திரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், விமானத்தை தொடர்பு கொண்ட போது, அதிலிருந்து பதில்கள் ஏன் கிடைக்கவில்லை என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu