கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது, வெளிநாட்டினருக்கான விசா வழங்கலை சீனா நிறுத்தி வைத்திருந்தது. தற்போது, கொரோனா பரவல் நீங்கியுள்ளதால், வெளிநாட்டினருக்கு மீண்டும் விசா வழங்க சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புதிய பயண ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, விசா அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020 மார்ச் 28 ஆம் தேதிக்கு முன்னர் வழங்கப்பட்ட விசாக்கள் இன்னும் செல்லுபடி ஆகும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கப்பல் மூலம் ஷாங்காய்க்கு வருபவர்களுக்கு, தொடர்ந்து விசா இல்லாத பயணம் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங், மக்காவ் மற்றும் ஆசிய பிராந்திய குழுவில் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கும் விசா இல்லாமல் பயணம் அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.














