ஆந்திராவின் நிர்வாக தலைநகராக செப்டம்பர் முதல் விசாகப்பட்டினம் செயல்படும் என ஆந்திரமுதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் ஒருசேர அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதால் சட்டமன்ற தலைநகராக அமராவதியும், நிர்வாக தலைநகராக தொழில் நகரமான விசாகப்பட்டினமும், நீதித்துறை தலைநகராக கர்நூலும் இருக்கும் என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்பட துவங்கும். நான் அங்கு குடியேற இருக்கிறேன் என்று அறிவித்தார்.














