பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலபகுதியில் 198 வகை பறவைகள் வருகை தந்துள்ளன.
பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்லும். தற்போது பெய்த கனமழையின் காரணமாக சதுப்பு நில பகுதி தண்ணீர் நிறைந்து காட்சியளிக்கிறது
இதனால் அங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவ்வகையில் இமயமலை நீல சோலை பாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் புதுவரவு பறவைகள் கணக்கெடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 198 வகை பறவைகளின் வருகை உறுதியாகியுள்ளது.














