ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை - மதுரை-கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

February 18, 2023

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நாளை (18-ந் தேதி) தமிழகம் வருகிறார். மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவை வெள்ளியங்கிரி யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவாரத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் […]

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நாளை (18-ந் தேதி) தமிழகம் வருகிறார். மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவை வெள்ளியங்கிரி யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவாரத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் அவர், அங்கு சாமி தரிசனம் செய்கிறார். தரிசனத்தை முடித்து கொண்டு, பிற்பகல் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தொண்டா முத்தூர் வழியாக காரில் ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார்.

19-ந் தேதி காலை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் ஜனாதிபதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu