சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 360 மில்லியன் டாலர் முதலீட்டுக்கு இந்தியாவின் எப்டிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாராவை இணைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைப்புக்கு பிறகு, விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா குழுமத்தில் 25.1% பங்கை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, விமானங்கள் மற்றும் ஊழியர்கள் ஒன்றாக இணைக்கப்படுகின்றனர். இது, இந்திய விமான சந்தையில் மிகப்பெரிய விமான நிறுவனத்தை உருவாக்கும்.














