விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் ஸ்டார் திட்டத்தின் 2024 - 2025 ஆம் கல்விபாண்டிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான STARS திட்டத்திற்காக கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த திட்டமானது மத்திய பிரதேசத்தின் ஊரக பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஆதரவளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த அனைத்து புதிய மாணவர்களுக்கும் சேர்க்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தராகிய டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்களால் தொடங்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாட்டுடன் 100% கட்டணமில்லா கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை STARS திட்டத்தின் கீழ் ஊரக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 175 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்