அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் போட்டியில் விவேக் ராமசாமி

February 27, 2024

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் போட்டியில் விவேக் ராமசாமி பங்கேற்க உள்ளார். குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான இடங்களில் தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட நிக்கி ஹாலே தெற்கு கரோலினாவில் தோல்வி அடைந்தார். எனினும் போட்டியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார். தற்போது குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. […]

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் போட்டியில் விவேக் ராமசாமி பங்கேற்க உள்ளார்.

குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான இடங்களில் தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட நிக்கி ஹாலே தெற்கு கரோலினாவில் தோல்வி அடைந்தார். எனினும் போட்டியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார். தற்போது குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எனவே துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்பாளர்களிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் தெற்கு ரகோட்டா ஆளுநர் கிறிஸ்டி நோம் இடையே தான் போட்டி நிலவுகிறது. கிறிஸ்டி தெற்கு ரகோட்டாவின் முதல் பெண் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu