விவோ நிறுவனத்தின் மடக்கு கைபேசி முதல் முறையாக இந்தியச் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ என்ற பெயரில் வெளியாகி உள்ள இந்த கைபேசியில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த தலைமுறைக்கான கைப்பேசி சாதனங்களாக மடக்கு கைபேசிகள் கூறப்படுகின்றன. அந்த வகையில், முதல் முறையாக, தனது மடக்கு கைபேசியை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 1.6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த கைப்பேசிக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படும் இந்த கைபேசியில், 2 டிஸ்ப்ளேக்கள் உள்ளன. பிரைமரி டிஸ்ப்ளே 8.03 இன்ச் மற்றும் வெளிப்புற டிஸ்ப்ளே 6.53 இன்ச் அளவு கொண்டது. இந்த கைபேசியில், 50 + 64 + 50 மெகாபிக்சல் பின்பக்க கேமராக்கள் உள்ளன. முன்பக்க கேமரா 32 மெகாபிக்சல் திறன் கொண்டது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்புடன் இந்த கைபேசி வெளியிடப்பட்டுள்ளது.