விவோ நிறுவனத்தின் விவோ ஒய் 200 ப்ரோ 5ஜி கைபேசி இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இந்திய சந்தையில் வெளியாகி உள்ள விவோ ஒய் 200 ப்ரோ 5ஜி கைபேசியின் ஆரம்ப விலை 24999 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி சலுகை விலையில் இந்த கைபேசியை வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படும் இந்த கைபேசியில் பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, 65 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ள இந்த கைபேசியின் டிஸ்ப்ளே 6.78 இன்ச் அமோல்ட் வகையாகும். மேலும், 5000mah பேட்டரி திறன் கொண்ட இந்த கைபேசியில் 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் உள்ளது.