வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் விற்க பேச்சுவார்த்தை நடந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக, வோடபோன் ஐடியா பங்குகள் 20% க்கும் மேலாக உயர்ந்தன. இந்த நிலையில், பங்குகள் விற்பனை குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றதா என்பது குறித்து செபி விசாரணை செய்தது. இந்த விசாரணையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என வோடபோன் ஐடியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
செபியின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு வோடபோன் நிறுவனம் இயங்கி வருவதாக வோடபோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு பங்கு விற்பனை செய்யப்படுவது குறித்து வெளியான செய்தி எந்த அடிப்படையில் வெளியானது என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளது.