வோடபோன் ஐடியா எஃப் பி ஓ - 5400 கோடி அளித்த ஆங்கர் முதலீட்டாளர்கள்

April 17, 2024

அண்மை காலமாக நிதி நெருக்கடியை சந்தித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக நிதி திரட்டும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. வோடபோன் நிறுவனம் பெற்றுள்ள கடனை அடைப்பதற்கு அதிக அளவில் புதிய முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதற்காக 18000 கோடி மதிப்பில் எஃப் பி ஓ வெளியிடுகிறது. இதில், கிட்டத்தட்ட 5400 கோடி நிதியை ஆங்கர் முதலீட்டாளர்கள் செலுத்துவார்கள் என கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா முதலீட்டாளர்கள் பட்டியலில் பல்வேறு பெரிய நிறுவனங்களின் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, மோர்கன் ஸ்டான்லி, ஃபிடலிட்டி, […]

அண்மை காலமாக நிதி நெருக்கடியை சந்தித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக நிதி திரட்டும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.

வோடபோன் நிறுவனம் பெற்றுள்ள கடனை அடைப்பதற்கு அதிக அளவில் புதிய முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதற்காக 18000 கோடி மதிப்பில் எஃப் பி ஓ வெளியிடுகிறது. இதில், கிட்டத்தட்ட 5400 கோடி நிதியை ஆங்கர் முதலீட்டாளர்கள் செலுத்துவார்கள் என கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா முதலீட்டாளர்கள் பட்டியலில் பல்வேறு பெரிய நிறுவனங்களின் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, மோர்கன் ஸ்டான்லி, ஃபிடலிட்டி, யூபிஎஸ், ஜி கியூ ஜி பார்ட்னர்ஸ், சிட்டி குழுமம், மோதிலால் ஓஸ்வால், மணி கண்ட்ரோல் ஆகிய நிறுவனங்கள் இணைவதாக தகவல் வெளிவந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் திரட்டும் பெரும்பாலான நிதி, கடன் சுமையை குறைப்பதற்கும், இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கும் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu