வோடபோன் ஐடியா எப் பி ஓ - 7.27% ப்ரீமியத்தில் வெளியான பங்குகள்

April 25, 2024

கடந்த வாரத்தில் எப் பி ஓ மேற்கொள்ளப்பட்ட பிறகு, இன்று முதல் வோடபோன் ஐடியா பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. எஃப்பிஓ வெளியீட்டை விட 7.27% உயர்வான விலைக்கு பங்குகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதி வரை, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எப் பி ஓ நடைபெற்றது. அப்போது, 10 - 11 ரூபாய்க்கு நிறுவனத்தின் பங்குகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு முதல் முறையாக, பங்குச் சந்தையில் இன்று முதல் பட்டியலாகின்றன. […]

கடந்த வாரத்தில் எப் பி ஓ மேற்கொள்ளப்பட்ட பிறகு, இன்று முதல் வோடபோன் ஐடியா பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. எஃப்பிஓ வெளியீட்டை விட 7.27% உயர்வான விலைக்கு பங்குகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதி வரை, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எப் பி ஓ நடைபெற்றது. அப்போது, 10 - 11 ரூபாய்க்கு நிறுவனத்தின் பங்குகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு முதல் முறையாக, பங்குச் சந்தையில் இன்று முதல் பட்டியலாகின்றன. இன்றைய வர்த்தக நாளில், தேசிய பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11.8 ரூபாயாக இருந்தது. மேலும், மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியாவின் பங்கு மதிப்பு வெளியீட்டுத் தொகையை விட 9% உயர்வாக, ஒரு பங்கு 12 ரூபாய்க்கு பட்டியலானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu