வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 10% அளவுக்கு உயர்ந்துள்ளது.
யூபிஎஸ் நிறுவனம், வோடபோன் பங்குகள் தொடர்ந்து உயரும்; அதனால் பங்குகளை வாங்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டிருந்தது. இதன் விளைவாக, வோடபோன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வை சந்தித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் பங்கு மதிப்பு இலக்கு 13.1 ரூபாயில் இருந்து 18 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, 80% அளவுக்கு பங்கு மதிப்பு உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் வோடபோன் நிறுவனத்திற்கு சாதகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.