இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் தனக்கிருந்த 18% பங்குகளை வோடபோன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இன்று பிளாக் டீல் மூலம் பங்கு விற்பனை நடைபெற்றுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு இருக்கும் 15,300 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதற்கு நிதி திரட்டும் நடவடிக்கையின் பகுதியாக இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் 484.7 மில்லியன் பங்குகளை வோடபோன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பிளாக் டீல் மூலம் நடைபெற்ற இந்த விற்பனைக்குப் பிறகு, 82.5 மில்லியன் இண்டஸ் டவர்ஸ் பங்குகள் வோடபோன் நிறுவனத்தின் வசம் உள்ளன. இது நிறுவனத்தின் மொத்த பங்கு பங்களிப்பில் 3.1% ஆகும். முன்னதாக, 7.1% அளவுக்கு வோடபோனின் பங்களிப்பு இருந்தது. வோடபோன் விற்பனை செய்த பங்குகளை வாங்கியவர்களில் ஏர்டெல் நிறுவனம் முக்கியமானது. அதன்படி, இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் ஏர்டெல் நிறுவனத்துக்கு இருக்கும் பங்கு பங்களிப்பு 1% உயர்ந்து 48.95% ஆக உள்ளது.