இனிமேல் வாய்ஸ் அடிப்படையில் யுபிஐ பேமெண்ட் வசதிகளை பெறும் கருவிகள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இதற்கான பிரத்தியேக சாதனங்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குளோபல் பின்டெக் ஃபெஸ்டிவல் நிகழ்வில் என்பிசிஐ இன் வாய்ஸ் யுபிஐ சாதனங்கள் அறிமுகம் ஆகின்றன. இதன் மூலம், யு பி ஐ பரிவர்த்தனைகள் பன்மடங்கு உயரும் என சொல்லப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 மில்லியன் பரிவர்த்தனை இலக்கை நோக்கி இந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஹலோ யுபிஐ என்ற சாதனம், வாய்ஸ் அடிப்படையில், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவின் மற்ற மொழிகளிலும் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளில் இந்த சாதனம் வெளியாகிறது. ஒன்று, வழக்கமாக ஏஐ உடன் உரையாடும் வகையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது. இரண்டாவது, பிரத்தியேக கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அதன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது. இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.