ஏற்ற இறக்கப் பாதையில் பங்குச் சந்தை

May 16, 2024

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் வங்கி மற்றும் வாகனத்துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சி அடைந்து வந்தது. இதனால் இந்திய பங்குச் சந்தை இறக்கப் பாதையில் பயணித்து வந்தது. ஆனால், மதிய நேர வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றம் பதிவாகியுள்ளது. இறுதியாக, இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 676.69 புள்ளிகளும் நிஃப்டி 203.3 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை 73663.72 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை 22403.85 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன. இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, டாடா கன்ஸ்யூமர், […]

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் வங்கி மற்றும் வாகனத்துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சி அடைந்து வந்தது. இதனால் இந்திய பங்குச் சந்தை இறக்கப் பாதையில் பயணித்து வந்தது. ஆனால், மதிய நேர வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றம் பதிவாகியுள்ளது. இறுதியாக, இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 676.69 புள்ளிகளும் நிஃப்டி 203.3 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை 73663.72 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை 22403.85 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, டாடா கன்ஸ்யூமர், ஏர்டெல், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, பிபிசிஎல், பவர் கிரிட், இண்டஸ் இண்ட் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் ஆகியவை சரிந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu