பிலிப்பைன்ஸ் எரிமலையில் இருந்து விஷ வாயுக்கள் வெளியேற்றம் - பள்ளிகள் மூடல்

September 22, 2023

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தால் எரிமலை விஷ வாயுக்களை வெளியேற்றி வருகிறது. தலைநகர் மணிலாவுக்கு அருகில் உள்ள இந்த எரிமலையில் இருந்து சராசரி அளவுக்கும் அதிகமாக சல்ஃபர் டை ஆக்சைடு வாயு வெளியேறி வருகிறது. இதன் காரணமாக, எரிமலைக்கு அருகில் உள்ள 5 நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 நகரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மொத்தம் 24 எரிமலைகள் துடிப்புடன் உள்ளன. […]

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தால் எரிமலை விஷ வாயுக்களை வெளியேற்றி வருகிறது. தலைநகர் மணிலாவுக்கு அருகில் உள்ள இந்த எரிமலையில் இருந்து சராசரி அளவுக்கும் அதிகமாக சல்ஃபர் டை ஆக்சைடு வாயு வெளியேறி வருகிறது. இதன் காரணமாக, எரிமலைக்கு அருகில் உள்ள 5 நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 நகரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மொத்தம் 24 எரிமலைகள் துடிப்புடன் உள்ளன. அவற்றில், தால் எரிமலை முக்கியமானதாகும். கடந்த 2020 ஜனவரியில் சீற்றமடைந்த இந்த எரிமலை, தற்போது விஷ வாயுக்களை வெளியேற்றி வருகிறது. கடந்த முறை ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த முறை விஷ வாயுக்கள் வெளியேறி உள்ளதால் பாதிப்புகள் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu