ஹைபிரிட் மாடல் வாகனங்கள் விலையில் 2% உயர்வு - வோல்வோ அறிவிப்பு

February 23, 2023

வோல்வோ கார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, தனது ஹைபிரிட் மாடல் வாகனங்களின் விலையில் 2% உயர்வை அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது வாகனங்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டதால், இந்த விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் ஹைபிரிட் வகை வாகனங்களான XC40, XC60, S90 மற்றும் XC90 ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு பின்னர், XC40 பி4 ஹைபிரிட் வாகனத்தின் விலை 46.4 லட்சம் ரூபாயாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், […]

வோல்வோ கார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, தனது ஹைபிரிட் மாடல் வாகனங்களின் விலையில் 2% உயர்வை அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது வாகனங்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டதால், இந்த விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் ஹைபிரிட் வகை வாகனங்களான XC40, XC60, S90 மற்றும் XC90 ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு பின்னர், XC40 பி4 ஹைபிரிட் வாகனத்தின் விலை 46.4 லட்சம் ரூபாயாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், XC60 பி5 வாகனம் 67.5 லட்சம் ரூபாய்க்கும், S90 பி5 வாகனம் 67.9 லட்சம் ரூபாய்க்கும், XC90 பி6 ஹைபிரிட் வாகனம் 98.5 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu