பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அட்டையை இ-சேவையில் பெற இயலாது - சத்யபிரத சாஹூ 

பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அட்டையை இ-சேவையில் பெற இயலாது என்று சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்களில் பெறும் வசதி இருந்தது. தற்போது புதிய அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்படும் நிலையில், இணைய மையங்களில் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டில் 4 காலாண்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், […]

பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அட்டையை இ-சேவையில் பெற இயலாது என்று சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்களில் பெறும் வசதி இருந்தது. தற்போது புதிய அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்படும் நிலையில், இணைய மையங்களில் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டில் 4 காலாண்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை நடைபெற்று வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். புதிய வாக்காளர்கள், முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அட்டை விநியோகிக்கப்படுகிறது. புதிய அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தேவை அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu