மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம் 3,419 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளன. நாகாலாந்து சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. ஒரு தொகுதியில் பா.ஜ., - எம்.எல்.ஏ., கஸிடோ கினிமி போட்டியின்றி வெற்றி பெற்றார். காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 4:00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
மேகாலயா, நாகாலாந்து மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டசபை மற்றும் ஒரு லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல்கள் நடக்கின்றன. மார்ச் 2ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.