கர்நாடக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை தொடக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கர்நாடகவில் 224 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும் ஆம் ஆத்மி 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து […]

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

கர்நாடகவில் 224 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும் ஆம் ஆத்மி 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முதல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கினர். தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu