தொழில்நுட்ப சிக்கல் காரணமாக வாயேஜர் 2 பாகத்தின் செயல்பாட்டை நிறுத்தியது நாசா

கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை விட்டுப் புறப்பட்ட வாயேஜர் 2 விண்கலம் இப்போது சூரிய குடும்பத்திற்கு வெளியே 12.8 பில்லியன் மைல் தொலைவில் பயணித்து வருகிறது. இந்த விண்கலம் தனது பயணத்தில் சேகரித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில், விண்கலத்தின் ஆற்றல் குறைந்து வருவதால், அதில் உள்ள பிளாஸ்மா அறிவியல் கருவியை செயலிழக்கச் செய்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சூரிய குடும்பத்தின் எல்லையைக் கடந்து வாயேஜர் […]

கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை விட்டுப் புறப்பட்ட வாயேஜர் 2 விண்கலம் இப்போது சூரிய குடும்பத்திற்கு வெளியே 12.8 பில்லியன் மைல் தொலைவில் பயணித்து வருகிறது. இந்த விண்கலம் தனது பயணத்தில் சேகரித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில், விண்கலத்தின் ஆற்றல் குறைந்து வருவதால், அதில் உள்ள பிளாஸ்மா அறிவியல் கருவியை செயலிழக்கச் செய்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சூரிய குடும்பத்தின் எல்லையைக் கடந்து வாயேஜர் 2 விண்கலம் விண்வெளியில் நுழைந்ததை பிளாஸ்மா அறிவியல் கருவிதான் உறுதி செய்தது. ஆனால், தற்போது இந்த கருவியின் செயல்பாடு குறைந்து விட்டதால், அதை செயலிழக்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற கருவிகளின் ஆயுளை நீட்டிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu