கடந்த சில மாதங்களாக தொடர் ஏற்றங்களை பதிவு செய்து வந்த என்விடியா பங்குகள் சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப்பெரிய அளவில் சரிவு காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று பெரும்பாலான பங்குகள் ஏற்றம் பெற்ற நிலையில், என்விடியா பங்குகள் சரிவை சந்தித்தது. இதனால் நாஷ்டாக் 0.5% வீழ்ச்சடைந்ததாக கூறப்படுகிறது. என்விடியா பங்குகள் 5.5% வரை நேற்று வீழ்ச்சி அடைந்தது. ஒரு வேளை இது நிகழாமல் இருந்திருந்தால், அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று ஏற்றம் பதிவாகி இருக்கும் என கூறப்படுகிறது.