பிளிப்கார்ட் பங்குகளை வாங்கிய வால்மார்ட் - பின்னி பன்சால் வெளியேறினார்

August 1, 2023

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும் பங்குகளை வால்மார்ட் கையகப்படுத்தியது. ஆனாலும், தொடர்ந்து சில பங்குகள் டைகர் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் வசம் இருந்தன. அத்துடன், பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை தோற்றுனரான பின்னி பன்சால் வசம் இருந்தன. தற்போது, டைகர் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வைத்திருந்த பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட் வாங்கி உள்ளது. இதற்காக 1.4 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அக்சல் நிறுவனமும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மிக முக்கிய முதலீடுகளை செய்திருந்தது. தற்போது இந்த நிறுவனமும் […]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும் பங்குகளை வால்மார்ட் கையகப்படுத்தியது. ஆனாலும், தொடர்ந்து சில பங்குகள் டைகர் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் வசம் இருந்தன. அத்துடன், பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை தோற்றுனரான பின்னி பன்சால் வசம் இருந்தன. தற்போது, டைகர் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வைத்திருந்த பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட் வாங்கி உள்ளது. இதற்காக 1.4 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

அக்சல் நிறுவனமும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மிக முக்கிய முதலீடுகளை செய்திருந்தது. தற்போது இந்த நிறுவனமும் வெளியேறி உள்ளது. எனவே, முழுமையாக, பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து பின்னி பன்சால், அக்சல், டைகர் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய மூவரும் வெளியேறியுள்ளனர். பின்னி பன்சால், போன் பே நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகள் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே வேளையில், பிளிப்கார்ட் வர்த்தகத்தை பன்மடங்கு உயர்த்தும் திட்டத்தில் வால்மார்ட் களமிறங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu