வால்மார்ட் நிறுவனம், சீனாவின் பொருளாதார சரிவு மற்றும் கடும் போட்டி காரணமாக, சீன இ-காமர்ஸ் நிறுவனமான ஜே.டி.காமில் (JD.com Inc.) உள்ள தனது பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, 8 வருட பங்களிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, பங்கு விற்பனை மூலம் ₹28,000 கோடி (US$3.74 பில்லியன்) திரட்ட உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில், வால்மார்ட் ஜே.டி.காமில் 5% பங்குகளை வாங்கியது. அப்போது இந்த கூட்டணி உருவானது. பின்னர், பங்கு பங்களிப்பை 10.8% ஆக உயர்த்தியது. இந்த நிலையில், வால்மார்ட், 11.8% தள்ளுபடியில் 144.5 மில்லியன் பங்குகளை வழங்குவதாக கூறியுள்ளது. இந்த நடவடிக்கை, அலிபாபா மற்றும் பிடிடி ஹோல்டிங்ஸ் போன்ற தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் சில்லறை சந்தையில் வால்மார்ட்டின் உத்தி மாற்றத்தை பிரதிபலிக்கிறது. வால்மார்ட்டின் சாம்ஸ் கிளப் சீனாவில் சிறந்து விளங்கினாலும், மற்ற கடைகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.














