டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு தளத்தை இயக்கி வரும் ஸ்டார் இந்தியா குடும்பத்தின் நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தனது அமெரிக்க வணிகத்தை விற்றுள்ளது. இதனை வால்ட் டிஸ்னியின் பியூனா விஸ்டா வீடியோ ஆன் டிமாண்ட் நிறுவனம், 178.13 கோடிக்கு வாங்கியுள்ளது.
நோவி டிஜிட்டல் நிறுவனத்தின் தகவல்கள் படி, 2022-ம் நிதியாண்டில், நிறுவனத்திற்கு 219.72 கோடி ரூபாய் தனிப்பட்ட வருவாய் கிடைத்துள்ளது. இது நிறுவனத்தின் அமெரிக்க வணிகத்தை விற்றதன் மூலமும், திரும்பக் கிடைத்த ஒத்திவைக்கப்பட்ட வருமானம் மூலம் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் டர்ன் ஓவர் 93% உயர்ந்து, 3220.41 கோடியாகவும், இழப்புகள் 43% குறைந்து, 343.16 கோடியாகவும் பதிவாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் வணிகத்தை கைப்பற்றியது டிஸ்னியின் வியாபார உத்தி ஆகும். இதன் மூலம், அதன் அனைத்து ஒளிபரப்பு தளங்களையும் ஒற்றைக் குழுவாக டிஸ்னி இணைத்துள்ளது.