வரும் மார்ச் மாத இறுதியில் டிஜிட்டல் நோமாட் விசா என்ற புதிய விசாவை ஜப்பான் கொண்டு வருகிறது. இதன் மூலம், ஆறு மாத காலத்திற்கு ஜப்பானிலிருந்து பணியாற்ற முடியும். ஆண்டுக்கு 10 மில்லியன் யென், அதாவது 56 லட்ச ரூபாய் ஊதியம் பெறும் தனிநபர் ஒருவர் இந்த விசாவை பெறுவதற்கு தகுதி உடையவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாடு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 49 உலக நாடுகளில் இருந்து பயணிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக, டிஜிட்டல் நோமாட் விசாவை அறிமுகம் செய்கிறது. அதன்படி, ஆறு மாத காலத்திற்கு ஜப்பானிலிருந்து ஒருவர் பணியாற்ற முடியும். தனது வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல முடியும். ஜப்பானில் தொடர்ந்து தங்கி இருக்க விரும்பினால், தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி, 6 மாதம் கழித்து மீண்டும் நோமாட் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நிறுவன ஊழியர்கள் மட்டுமின்றி, தனி நபராக சம்பாதிப்பவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.














