வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனம் இந்த வாரம் தனது மேக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவையை ஆசியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நெட்ஃபிக்ஸ், டிஸ்னி போன்ற பிரபல ஸ்ட்ரீமிங் தளங்களுடன் போட்டியிட இந்த நிறுவனம் தயாராகி வருகிறது. ஆசிய சந்தையில் உள்ளூர் தயாரிப்புகளில் அதிக முதலீடு செய்யாமல், ஹாரி பாட்டர், பிரெண்ட்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் படங்களை அதிகம் பயன்படுத்தி இந்த நிறுவனம் தனது சேவையை வழங்க உள்ளது.
ஆசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டின் தேவைகளுக்கும் ஏற்ப தனித்தனி உத்திகளை வகுத்து, சிறப்பான முறையில் வார்னர் பிரதர்ஸ் ஸ்ட்ரீமிங் சேவைகள் வெளியாகின்றன. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் HBO Go சேவையை மாற்றி மேக்ஸ் சேவையை வழங்க வார்னர் பிரதர்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது.














