$370 மில்லியன் பாங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை விற்றார் வாரன் பஃபெட்

October 18, 2024

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் இந்த வாரம் சுமார் $370 மில்லியன் மதிப்புள்ள பாங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை விற்றுள்ளது. இதன் மூலம் பெர்க்ஷயரின் பங்கு 9.97% ஆக குறைந்துள்ளது. ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இது பஃபெட்டின் 16வது விற்பனையாகும். இருந்தபோதிலும் பெர்க்ஷயர் இன்னும் பாங்க் ஆஃப் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குதாரராகவே உள்ளது. தற்போது பெர்க்ஷயர் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு சுமார் $32.6 பில்லியன் ஆகும். அமெரிக்காவில் 10%க்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் […]

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் இந்த வாரம் சுமார் $370 மில்லியன் மதிப்புள்ள பாங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை விற்றுள்ளது. இதன் மூலம் பெர்க்ஷயரின் பங்கு 9.97% ஆக குறைந்துள்ளது. ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இது பஃபெட்டின் 16வது விற்பனையாகும். இருந்தபோதிலும் பெர்க்ஷயர் இன்னும் பாங்க் ஆஃப் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குதாரராகவே உள்ளது. தற்போது பெர்க்ஷயர் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு சுமார் $32.6 பில்லியன் ஆகும்.

அமெரிக்காவில் 10%க்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்களது வர்த்தகங்கள் குறித்த தகவல்களை விரைவாக வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, இதற்கு முன்னர் பாங்க் ஆப் அமெரிக்காவில் பெர்க்ஷயரின் பங்கு 10% என்ற ஒழுங்குமுறை வரம்பைத் தாண்டியிருந்தது. தற்போது வரம்புக்குள் வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu