இன்று அதிகாலை இங்கிலாந்தில் விழுந்த விண்கல் - வேகமாக பகிரப்படும் வீடியோ

February 13, 2023

இன்று அதிகாலை 3 மணியளவில், பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கல் ஒன்று நுழைந்துள்ளது. இது இரவு நேர வானை வெளிச்சமாக்கி காட்டியது. இது குறித்த காணொளிகள் தற்போது வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள இங்கிலீஷ் கால்வாய் பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பட்டது. தெற்கு இங்கிலாந்து, வேல்ஸ், பாரிஸ் மற்றும் பிரான்ஸ் பகுதிகளிலும் இந்த விண்கல் விழும் நிகழ்வு காணப்பட்டுள்ளது. சார் 2667 என்று அழைக்கப்படும் இந்த விண்கல், ஒரு மீட்டர் அகலம் உடையதாக கருதப்படுகிறது. பூமியில் விழுந்த […]

இன்று அதிகாலை 3 மணியளவில், பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கல் ஒன்று நுழைந்துள்ளது. இது இரவு நேர வானை வெளிச்சமாக்கி காட்டியது. இது குறித்த காணொளிகள் தற்போது வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தில் உள்ள இங்கிலீஷ் கால்வாய் பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பட்டது. தெற்கு இங்கிலாந்து, வேல்ஸ், பாரிஸ் மற்றும் பிரான்ஸ் பகுதிகளிலும் இந்த விண்கல் விழும் நிகழ்வு காணப்பட்டுள்ளது. சார் 2667 என்று அழைக்கப்படும் இந்த விண்கல், ஒரு மீட்டர் அகலம் உடையதாக கருதப்படுகிறது. பூமியில் விழுந்த இடத்தில், விண்கல்லின் பகுதிகளை தேடும் பணியில் சர்வதேச விண்கல் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த நிகழ்வு ஏற்கனவே கணிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். அத்துடன், இதுபோன்ற விண்கல் விழும் நிகழ்வு ஏழாவது முறையாக கணிக்கப்பட்டு நிகழ்ந்துள்ளதாகவும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய விண்வெளி நிலையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. “விண்கல் குறித்த நமது கணிப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது” என்று கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu