கினியாவில் கால்பந்து ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கினியாவின் இரண்டாவது பெரிய நகரான என்சரிகோரில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியின் போது, ஒரு சர்ச்சையான தீர்ப்பு வழங்கியதால், ஒரு தரப்பு ரசிகர்கள் ஆத்திரமடைந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதையடுத்து, மற்றொரு தரப்பும் மைதானத்தில் புகுந்து வன்முறைச் சம்பவங்களை துவக்கினர். மைதானம் மட்டுமின்றி, சாலைகளிலும் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், காவல்நிலையத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் தீ […]

கினியாவில் கால்பந்து ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கினியாவின் இரண்டாவது பெரிய நகரான என்சரிகோரில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியின் போது, ஒரு சர்ச்சையான தீர்ப்பு வழங்கியதால், ஒரு தரப்பு ரசிகர்கள் ஆத்திரமடைந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதையடுத்து, மற்றொரு தரப்பும் மைதானத்தில் புகுந்து வன்முறைச் சம்பவங்களை துவக்கினர். மைதானம் மட்டுமின்றி, சாலைகளிலும் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், காவல்நிலையத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu