சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் அங்குள்ள கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் பல இடங்களில் கன மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது நீர்மட்டம் 23 அடியை இறங்குவதால் 200 கன அடி நீரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 175 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கரையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.