சென்னையில் கனமழை காரணமாக 127 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காரணமாக சென்னையில் 127 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 6 மரங்கள் விழுந்துள்ளன. இதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தண்ணீரை வெளியேற்ற 593 பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.