சென்னையில் 2 நாட்களுக்கு 7 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பூந்தமல்லி சாலையில் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக சென்னையில் ஏழு மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இன்று இரவு 9 மணி முதல் 27ஆம் தேதி இரவு 9 மணி வரை இரண்டு நாட்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














