வறண்ட இடமான கலிபோர்னியாவின் டெத் பள்ளத்தாக்கில் தோன்றிய நீர்வீழ்ச்சிகள்

September 13, 2022

அமெரிக்காவில் சமீபத்தில் உ௫வான சூறாவளியானது அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுத்தது. அதன் விளைவாக உலகின் வறண்ட, வெப்பமான இடங்களில் ஒன்றான டெத் பள்ளத்தாக்கில் நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன. கலிபோர்னியா-நெவாடா எல்லையில் அமைந்துள்ள டெத் வேலி எனும் இடமானது 56.6 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட வறண்ட பகுதியாகும். மேலும் இப்பகுதி பொதுவாக ஆண்டுதோறும் வெறும் 2.2 அங்குல மழையைப் மட்டுமே பெறுகிறது. இந்நிலையில் சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட புயலானது டெத் வேலி தேசிய பூங்காவில் பலத்த சேதத்தை […]

அமெரிக்காவில் சமீபத்தில் உ௫வான சூறாவளியானது அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுத்தது. அதன் விளைவாக உலகின் வறண்ட, வெப்பமான இடங்களில் ஒன்றான டெத் பள்ளத்தாக்கில் நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன.

கலிபோர்னியா-நெவாடா எல்லையில் அமைந்துள்ள டெத் வேலி எனும் இடமானது 56.6 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட வறண்ட பகுதியாகும். மேலும் இப்பகுதி பொதுவாக ஆண்டுதோறும் வெறும் 2.2 அங்குல மழையைப் மட்டுமே பெறுகிறது. இந்நிலையில் சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட புயலானது டெத் வேலி தேசிய பூங்காவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாக தேசிய பூங்கா அதிகாரிகள் பேஸ்புக்கில் பதிவிட்டனர். அத்துடன் பேட்வாட்டர் பேசின் மலைப்பகுதியில் சேற்று நீர்வீழ்ச்சிகள் விழுவதைக் காட்டும் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். இது குறித்து தேசிய பூங்கா சேவை (NPS) ஒரு அறிக்கையில், தேசிய வானிலை சேவையிலிருந்து புயல் எச்சரிக்கை பெற்ற பின்னர் பார்வையாளர்களை வெளியேற்றியதாகவும் , வெள்ளப் பெ௫க்கின் காரணமாக நெடுஞ்சாலை 190, பள்ளத்தாக்கின் பிரதான சாலை, மற்றும் டவுன் பாஸ் அருகே உள்ள நடைபாதையின் ஒரு பகுதியைக் காணவில்லை என்றும் ௯றியது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu