வயநாடு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

October 16, 2024

வயநாடு இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சட்டப்படி, ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பியாக தொடர முடியுமென, அவர் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, ரேபரேலியில் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார். இதனை தொடர்ந்து வயநாடு இடைத்தேர்தல் தேதி, நவம்பர் […]

வயநாடு இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சட்டப்படி, ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பியாக தொடர முடியுமென, அவர் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, ரேபரேலியில் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார். இதனை தொடர்ந்து வயநாடு இடைத்தேர்தல் தேதி, நவம்பர் 13 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுடன், வயநாடு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu