ரஷியா அனுப்பிய 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம் என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 ட்ரோன்களை அனுப்ப தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை கூறியிருக்கிறது. மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவ நிர்வாக தலைவர் செர்ஜி பாப்கோ தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற தீவிரமான தாக்குதலை பார்த்ததில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் சிதறின. ஆனால் இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் பாப்கோ கூறினார்.