தமிழகத்தில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தை ஒட்டிய கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கன மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில், அடுத்த 2 நாட்களுக்கு, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.