தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

August 10, 2023

தமிழ்நாட்டின் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அதிக அளவில் வெப்பம் இருந்து வருகிறது. சில இடங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 11 மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி […]

தமிழ்நாட்டின் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அதிக அளவில் வெப்பம் இருந்து வருகிறது. சில இடங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 11 மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை வாய்ப்பு பகுதி எனவும், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu