வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பாகிஸ்தானில் மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று பாகிஸ்தான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வெப்பம் காரணமாக பனிப்பாறைகள் உருகி அதனால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து பள்ளிகளும் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த மாதம் முழுதும் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இயற்கை பேரழிவுகள் அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. நாட்டில் மூன்றில் ஒரு பகுதி மூழ்கிவிடலாம் என்று கூறப்படுகிறது. மருத்துவமனைகளில் வெப்ப அலைகளால் ஏற்படும் உடல் நல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.