ஊட்டி அரசு மற்றும் தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இங்குள்ள இத்தாலியன் கார்டன் கண்ணாடி மாளிகையில் வண்ணமலர்கள் பூத்துக் குலுங்குகிறது. மேலும் பல ஆயிரம் மலர்கள் மாதங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு நான்கு நாட்களில் 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில் பத்தாயிரம் மலர் தொட்டியில் வடிவமைக்கப்பட்ட சந்திராயன் -3 விண்கலம் மாடங்களில் வண்ண மலர்களை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பயணிகள் கூட்டம் கூட்டமாக செல்ஃபி போட்டோ என எடுத்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் வாகன எரிச்சல் ஏற்பட்டுள்ளது. கவனமுடன் வாகனங்களை இயக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.