கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - தன்பாத், ஈரோடு - தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்க படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தாம்பரம்- தண்பாத், ஈரோடு - தான்பாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஏப்ரல் 28 மே 5,12,19,26 மற்றும் ஜூன் 29,16,23,30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோன்று மறுமார்க்கமாக தன்பாத்திலிருந்து மே 1,8,15,29 ஜூன் 5,12,19,26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் ஈரோட்டில் இருந்து 26 மே 10,17,24,31 மற்றும் ஜூன் 7,21,28 ஆகிய தேதிகளிலும் அதேபோன்று மறுமார்க்கமாக தன்பாத்திலிருந்து வரும் 29 மே 6,13,20, 27 ஜூன் 3,10,17,27 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.














