தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம் - கொச்சி வேலி இடையே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீடிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜூலை மாதம் 7, 14, 21 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூலை 8, 15, 22 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதே போல தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 4, 6, 11,13, 18, 20 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக கொச்சி வேலியிலிருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரயில்கள் ஜூலை 5, 7, 12, 14,19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது