பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ( BSNL ), நிறுவனமானது, குறைந்த விலை வரம்பில் சிறந்த பலன்களை வழங்கும் ரூ.107 ப்ரீபெய்ட் பேக்கை தனது பட்டியலில் வைத்துள்ளது.
பிஎஸ்என்எல்-இன் இந்த ரூ.107 திட்டம் வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச குரல் மற்றும் தரவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு மாதத்திற்கும் மேலாக உங்கள் சிம்மை செயல்பாட்டில் வைத்திருக்க உதவும் தடையற்ற இணைப்பை இந்த பிளான் உறுதி செய்கிறது. BSNL ப்ரீபெய்ட் பேக் 107 ஆனது வாடிக்கையாளர்களுக்கு MTNL நெட்வொர்க்கிற்கான அழைப்புகள் உட்பட உள்ளூர், STD மற்றும் ரோமிங் அழைப்புகளை 200 நிமிடங்களுக்கு வழங்குகிறது. மேலும் இத்திட்டத்தில் வாய்ஸ் கால் வசதியுடன் பயனர்களுக்கு 3ஜிபி இலவச டேட்டாவும் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் 107 பேக் வாடிக்கையாளர்களுக்கு 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இத்தகைய வேலிடிட்டியை வேற எந்த டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது