மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

கடந்த 8ம் தேதி, மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது வன்முறை ஏற்பட்ட 696 வாக்குச்சாவடிகளில், நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள உள்ளாட்சி தேர்தல் முக்கியம் […]

கடந்த 8ம் தேதி, மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது வன்முறை ஏற்பட்ட 696 வாக்குச்சாவடிகளில், நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள உள்ளாட்சி தேர்தல் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மேலும் 2 தினங்களுக்கு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக, வாக்கு மையங்களுக்கு அருகில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு இடங்களில் தடியடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பரஸ்பர குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu