வாட்ஸ்அப் தொல்லை அழைப்புகளால் 46% இந்தியர்கள் பாதிப்பு - கருத்துக்கணிப்பு

அண்மைக்காலமாக, வாட்ஸ்அப் செயலியில், தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள 46% வாட்ஸ்அப் பயனர்கள், இதுபோன்ற தொல்லை அழைப்புகளால் பாதிப்படைந்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, சர்வதேச தொலைபேசி எண்களில் இருந்து 59% ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் வருவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், தொல்லை அழைப்புகளில் பெரும்பாலானவை, யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்ய சொல்லி கூறுவதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற ஊடக தளம் நடத்திய கருத்துக்கணிப்பில் […]

அண்மைக்காலமாக, வாட்ஸ்அப் செயலியில், தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள 46% வாட்ஸ்அப் பயனர்கள், இதுபோன்ற தொல்லை அழைப்புகளால் பாதிப்படைந்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, சர்வதேச தொலைபேசி எண்களில் இருந்து 59% ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் வருவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், தொல்லை அழைப்புகளில் பெரும்பாலானவை, யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்ய சொல்லி கூறுவதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற ஊடக தளம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கடந்த 30 நாட்களில் 86% பயனர்கள் இதுபோன்ற தொல்லை அழைப்புகளை பெற்றுள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த செய்தி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி, தொல்லை அழைப்புகள் குறித்து, இந்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு முறையாக நோட்டீஸ் அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu