வாட்ஸ்அப் பாஸ் கீ அம்சம் ஐபோன்களில் வெளியீடு

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் செயலில் ஏற்கனவே பாஸ் கீ அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது, செயலிக்குள் உள் நுழைவு செய்வதற்கான கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். இந்த அம்சம் தற்போது ஐபோன்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன்களில் பாஸ்வேர்ட் இல்லாமல் உள்நுழைவு செய்வதற்கான ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை போலவே வாட்ஸ்அப் செயலியின் பாஸ் கீ செயல்படும் என கூறப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 16 மற்றும் அதற்குப் பிறகான இயங்குதளங்களில் பாஸ் கீ அம்சம் செயல்படும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், […]

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் செயலில் ஏற்கனவே பாஸ் கீ அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது, செயலிக்குள் உள் நுழைவு செய்வதற்கான கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். இந்த அம்சம் தற்போது ஐபோன்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபோன்களில் பாஸ்வேர்ட் இல்லாமல் உள்நுழைவு செய்வதற்கான ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை போலவே வாட்ஸ்அப் செயலியின் பாஸ் கீ செயல்படும் என கூறப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 16 மற்றும் அதற்குப் பிறகான இயங்குதளங்களில் பாஸ் கீ அம்சம் செயல்படும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்களின் முகம், கைரேகை அல்லது பின் நம்பர் போன்றவற்றை பதிவிட்டு வாட்ஸ் அப் கணக்குக்குள் நுழைய முடியும். அமேசான், மைக்ரோசாப்ட், ஜிமெயில் போன்ற தளங்களிலும் பாஸ் கீ அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu